'குறும்பு செய்யும் பெண்களை வீட்டிலேயே வைத்திருப்போம்' - பெண்கல்வி குறித்து தலிபான் கருத்து

'குறும்பு செய்யும் பெண்களை வீட்டிலேயே வைத்திருப்போம்' - பெண்கல்வி குறித்து தலிபான் கருத்து
'குறும்பு செய்யும் பெண்களை வீட்டிலேயே வைத்திருப்போம்' - பெண்கல்வி குறித்து தலிபான் கருத்து

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீண்டும் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் ஆப்கானிஸ்தானின் தற்காலிக உள்துறை அமைச்சரும், தலிபான் துணைத் தலைவருமான சிராஜுதீன் ஹக்கானி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்கள் மீதான தங்கள் விதிகளில் மாற்றம் கொண்டு வருவோம் என்று தலிபான்கள்  உறுதியளித்தனர். ஆனாலும் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்கள் உயர்கல்விக்காக பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இதற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் மாணவிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர் 


இது தொடர்பாக பேசிய சிராஜுதீன் ஹக்கானி, "ஏற்கனவே பெண்கள் 6 ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர், உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான அனுமதிக்குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, மிக விரைவில், இதனைப் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். பெண்களை ஹிஜாப் அணியுமாறு நாங்கள் வற்புறுத்தவில்லை, ஆனால் நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம், அவ்வப்போது அவர்களுக்கு உபதேசம் செய்கிறோம். ஹிஜாப் கட்டாயமில்லை. ஆனால், அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டிய இஸ்லாமிய கட்டளை இது." என அவர் தெரிவித்தார்

மேலும், ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், நாங்கள் குறும்பு செய்யும் பெண்களை வீட்டிலேயே வைத்திருக்கிறோம் என்றும் சிராஜுதீன் ஹக்கானி கூறினார். 6 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளை மீண்டும் தொடங்க தலிபான்கள்  திட்டமிடப்பட்டுள்ளனர், ஆனால் ஷரியத் மற்றும்  ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின் படி பொருத்தமான பள்ளி சீருடை வடிவமைக்கப்படும் வரை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



சிராஜுதீன் ஹக்கானி FBI ஆல் தேடப்பட்டு, அமெரிக்க வெளியுறவுத்துறையால் "உலகளாவிய பயங்கரவாதி" என வகைப்படுத்தப்பட்டுள்ளார், அவரது தலைக்கு $10 மில்லியன் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com