இந்திய - சீன எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  

இந்திய - சீன எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  
இந்திய - சீன எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்   

இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேசித் தீர்க்க மத்தியஸ்தராக இருக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்

இந்திய - சீன எல்லையில் சில நாள்களாகப் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த 5ம் தேதி காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள்
சீன வீரர்கள் புகுந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பும் தாக்கிக்கொண்டனர். இரு நாட்டு ராணுவ உயர்
அதிகாரிகளும் தலையிட்டதை அடுத்து அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், சீன எல்லையில் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே சில நாள்களுக்குப் பிறகு சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருதரப்பினரும் வீரர்களைக் குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பேசித் தீர்க்க மத்தியஸ்தராக இருக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. இது குறித்து இந்தியா மற்றும் சீனாவிடம் தெரிவித்துள்ளோம் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com