இன்னொரு போர் தேவையில்லை: மலாலா கருத்து

இன்னொரு போர் தேவையில்லை: மலாலா கருத்து

இன்னொரு போர் தேவையில்லை: மலாலா கருத்து
Published on

இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்னொரு போர் தேவையில்லை என்று மலாலா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இதனால் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவியுமான மலாலா, இன்னொரு போர் தேவையில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “ எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் இருநாட்டு மக்களின் நிலைமை கவலை அளிக்கிறது.

போரின் கொடூரங்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். பதிலடி கொடுப்பதோ, பழிக்கு பழி வாங்குவதோ எப்போதும் சரியான முடிவாக இருக்காது. ஒருவேளை தொடங்கினால் முடிவது கடினமாகிவிடும். ஏற்கெனவே நடைபெற்ற போரால் லட்சகணக்கான மக்கள் இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு இன்னொரு போர் தேவையில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்உலகம் அவ்வளாக கண்டுகொள்வதும் இல்லை.

இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கடினமான நேரங்களில் தான் உண்மையான தலைமை பண்மை காண்பிக்க வேண்டும். இருவரும் ஒன்றாக அமர்ந்து, கைகுலுக்கி தற்போதைய நிலைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அத்துடன் நீண்ட நாள் பிரச்னையான காஷ்மீர் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு சர்வதேச சமூகமும் ஆதரவு அளிக்க வேண்டும். இரண்டு நாட்டு மக்களுக்கும் உண்மையான எதிரி யார் என்பது தெரியும். அதாவது தீவிரவாதம், வறுமை, கல்வியறிவின்மை, சுகாதார நெருக்கடிகள் தான் உண்மையான எதிரியே தவிர ஒரு நாடு மற்றொரு நாடுக்கு எதிரி அல்ல” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com