“இஸ்ரேல் அரசுடனான ஒப்பந்தங்களை நாம் நிறுத்திக் கொள்ளலாம்”-கூகுளை வலியுறுத்தும் ஊழியர்கள்
இஸ்ரேல் அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளலாம் என கூகுள் நிறுவனத்தை வற்புறுத்தி உள்ளனர் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள்.
பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலுக்கு தங்களது கண்டங்களை தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை கூகுள் நிறுவன ஊழியர்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தங்கள் நிறுவன தலைவருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஆன்லைனில் பெட்டிஷன் ஒன்றை சர்குலேட் செய்து வருவதாகவும் தெரிகிறது.
கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் செயல் தலைவர்கள் பலருக்கு இந்த கோரிக்கை அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது. மனித உரிமை மீறல்களை மேற்கோள் கட்டி இஸ்ரேல் உடனான ஒப்பந்தங்களை நாம் முறித்துக் கொள்ளலாம் என அதில் வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து கூகுள் வட்டாரத்தில் விசாரித்த போது கருத்து கூற மறுத்துவிட்டனர். கடந்த சில நாட்களில் மட்டும் காஸா உட்பட சில பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 61 குழந்தைகளும் அடங்கும். சுமார் 1400 பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.