\
அமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்!
Published on

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் இருந்து போர்ட்லேண்ட் நகருக்கு புதிய ரயில் ஒன்று இயக்கப்பட்டது. அதாவது சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இந்த தண்டவாளத்தில் முதன் முதலாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த முதல் பயணிகள் ரயில், தெற்கு டாகோமா என்ற பகுதியில் பாலம் ஒன்றின் மீது வேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.

மொத்தம் 14 பெட்டிகளைக் கொண்ட ரயிலில் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பாலத்தில் கீழே சென்றுகொண்டிருந்த கார் மற்றும் டிரக்குகள் மீது பெட்டிகள் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் நூறு பேர் காயமடைந்துள்ளனர். 
இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com