என்னிடம் ஸ்மாட்ஃபோன் இல்லை: ரஷ்ய அதிபர்!

என்னிடம் ஸ்மாட்ஃபோன் இல்லை: ரஷ்ய அதிபர்!
என்னிடம் ஸ்மாட்ஃபோன் இல்லை: ரஷ்ய அதிபர்!

தன்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அதிபர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய அவர், ‘இங்கு எல்லோர் பாக்கெட்டிலும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால், என்னிடம் அது இல்லை’ என்று பலத்த சிரிப்புக்கிடையே சொன்னார். 

கடந்த வருடம் பள்ளி மாணவர்களுடன் உரையாடியபோது, தான் இணையத்தைக் கூட அரிதாகவே பயன்படுத்துவதாகவும் இணையத்தில் கிடைக்கும் பல உள்ளடங்கங்கள் அச்சத்தைத் தருவதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இப்போது, ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதில்லை என்று புதின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, ’இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். நான் எதிலும் கணக்குத் தொடங்கவில்லை. ஆனால், எனது நிர்வாகத்தினர் எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறார்கள்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com