விவேக் ராமசாமிஎக்ஸ் தளம்
உலகம்
அமெரிக்கா | ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் விவேக் ராமசாமி?
இந்திய வம்சாவாளியினரான விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹையோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட 39 வயதான விவேக் ராமசாமி முனைப்பு காட்டினார். ஆனால் அந்த வாய்ப்பு டொனால்டு ட்ரம்ப்புக்கு சென்றுவிட்டது. எனினும் ட்ரம்ப், தாம் அமைக்க உள்ள அரசில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முக்கிய துறையை எலான் மஸ்க்குடன் இணைந்து நிர்வகிக்கும் பொறுப்பை விவேக் ராமசாமிக்கு வழங்கியுள்ளார்.
எலான் மஸ்க், ட்ரம்ப், விவேக் ராமசாமிஎக்ஸ் தளம்
இந்த நிலையில், ஓஹையோ மாகாண ஆளுநர் பதவிக்கு குறி வைத்திருக்கும் விவேக் ராமசாமி, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் எனக் கருதப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் ஆளுநர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. விவேக் ராமசாமியின் தந்தை கணபதி ராமசாமியும் தாய் கீதாவும் கேரளாவில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதும் பின்னர் அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.