அமெரிக்கா: ஆடைத் தொட்டியில் கிடந்த மம்மி உடல் - புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!

அமெரிக்கா: ஆடைத் தொட்டியில் கிடந்த மம்மி உடல் - புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!
அமெரிக்கா: ஆடைத் தொட்டியில் கிடந்த மம்மி உடல் - புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தென் கரோலினா மாகாணத்தில் ஒரு ஆடை நன்கொடை தொட்டியில் மம்மியாக்கப்பட்ட பிணம் ஒன்று கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லூகோஃப்பிலுள்ள காம்டென் வெஸ்ட் இன்னில் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத துருபிடித்த ஆடை தொட்டியில்தான் பிணம் கிடந்துள்ளது. வயிற்றை குமட்டும் நாற்றம் அந்த ஆடைத்தொட்டியில் வீசுவதாக ஒரு நபர் அளித்த புகாரின்பேரில் உள்ளூர் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த பிணமானது பல மாதங்களாக அங்கு கிடந்திருக்கிறது.

அந்த ஆடைத்தொட்டியில் VHS டேப்கள் போன்றவை காணப்பட்டதால் விசாரணை அதிகாரிகள், ஆரம்பத்தில் யாரோ ஒருவர் குளிரிலிருந்து தப்பிக்க தஞ்சம் அடைந்துள்ளதாக எண்ணியிருக்கின்றனர். பின்னர் சோதனை மேற்கொண்டதில், டிசம்பர் 31ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் ’வெர்ச்சுவலி மம்மிஃபைடு’ உடல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஷெரிஃப் போவோன் கூறுகையில், “இந்த கொலை குறித்து மேற்கொண்ட விசாரணைகளை மாகாண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் மற்றும் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மர்ம கொலைக்கான காரணம் விரைவில் வெளிவரும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com