முதன்முறையாக ராக்கெட் அனுப்பிய இங்கிலாந்து - தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் சோகம்

முதன்முறையாக ராக்கெட் அனுப்பிய இங்கிலாந்து - தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் சோகம்

முதன்முறையாக ராக்கெட் அனுப்பிய இங்கிலாந்து - தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் சோகம்

இங்கிலாந்து மண்ணில் இருந்து முதன்முதலாக ஏவப்பட்ட ராக்கெட் கடைசி நொடியில் தோல்வி அடைந்தது அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழும் இங்கிலாந்து, விண்வெளித் துறையைப் பொறுத்தவரையில் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. இதுவரை இங்கிலாந்தில் இருந்து நேரடியாக விண்ணுக்கு ராக்கெட் செலுத்தப்படவில்லை. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளின் உதவியுடனேயே விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த குறையைப் போக்குவதற்காகத் தான், இங்கிலாந்து முதல்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.

விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில், 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதன்பின் போயிங் விமானத்தில் 9 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் ரெுங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால், கடைசி சில நொடிகளில் ராக்கெட் திடீரென திசைமாறி புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகிச் சென்றது. இதனால் இந்த ராக்கெட் தோல்வி அடைந்ததாக பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இங்கிலாந்து மண்ணில் முதல்முறையாக விண்ணில் ஏவிய ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் அந்நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தவற விடாதீர்: அரிய வகை எலும்பு புற்றுநோயால் 20 வயதில் இறந்த இளம்பெண்... கவலையில் அவரது ஃபாலோயர்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com