\
donald trump
donald trumpreuters

புலியால் பலியான மனித உயிர்.. புலியைப் புரட்டியெடுத்த ட்ரம்ப்.. #ViralVideo

இங்கிலாந்தில் மனிதர் ஒருவரைக் கொன்ற புலி தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிர்ந்த நிலையில், அவர் புலியுடன் விளையாடுவது போன்ற மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்- ர

இங்கிலாந்தில் மனிதர் ஒருவரைக் கொன்ற புலி தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிர்ந்த நிலையில், அவர் புலியுடன் விளையாடுவது போன்ற மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் என்ன நடந்தது? ட்ரம்ப் பகிர்ந்த வீடியோக்களில் இடம்பெற்றிருப்பது என்ன என்பதைப் பார்க்கலாம்.

tiger
tigerreuters

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Yorkshire Wildlife Park வனவிலங்கு பூங்காவில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அங்குள்ள புலியின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த வில்லியம் சாப்மேன் என்ற 23 வயது இளைஞரை, புலி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டபோதும் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் அந்தக் காட்சிகளைத் தனது Truth Social தளத்தில் பகிர்ந்தார். அதனுடன், “இயற்கையுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள்” என்ற வாசகத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது புலியுடன் விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். ஆனால், அந்த வீடியோ உண்மையான சம்பவம் அல்ல; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள்தான் அவை. இதில் ட்ரம்ப் புலியுடன் விளையாடுவதும், அதனுடன் நட்பாக இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Court deals a blow to Trump
Court deals a blow to TrumpReuters

இதற்கு உயிரிழந்த வில்லியம் சாப்மேனின் குடும்பத்தினர் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு, சம்பவத்தின் வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்படுவது மேலும் மனவேதனையை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தக் காட்சிகளைப் பகிர்வதை நிறுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவை ட்ரம்ப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com