‘இன்னும் ஏன் முழிச்சிக்கிட்டு’ : குறட்டை விட்ட பூனைக்கு மீம் போட்டு வைரலாக்கிய நெட்டிசன்ஸ்

‘இன்னும் ஏன் முழிச்சிக்கிட்டு’ : குறட்டை விட்ட பூனைக்கு மீம் போட்டு வைரலாக்கிய நெட்டிசன்ஸ்
‘இன்னும் ஏன் முழிச்சிக்கிட்டு’ : குறட்டை விட்ட பூனைக்கு மீம் போட்டு வைரலாக்கிய நெட்டிசன்ஸ்

செல்லப்பிராணிகள் தொடர்பான வியக்க வைக்கும் funny வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கமாக இருந்தாலும், அவற்றில் சில நெட்டிசன்களை வெகுவாகவே கவர்ந்துவிடும்.

அதில் நாய் மற்றும் பூனைகளின் சேட்டைகளுக்கு அளவே இருக்காது. அந்த செல்லப்பிராணிகளை வைத்து அதன் உரிமையாளர்கள் செய்யும் குறும்புகளுக்கு அதைவிட அதிக வியூஸ்களே கிடைக்கும்.

அந்த வகையில் பூனை ஒன்று வின்னர் பட வடிவேலு பாணியில் தூங்குடா கைப்புள்ள என்பது போல தூங்கும் வீடியோதான் ட்விட்டரில் வைரலாகியிருக்கிறது.

மீன் வடிவிலான தலையணையில் தலையை வைத்து அக்கடா என்று அந்த பூனை தூங்கிக் கொண்டிருக்கும் வீடியோ மூன்று லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

அதில், தூங்கிக் கொண்டிருக்கும் பூனை தனது கண்ணை மூடியும் மூடாமலும் மெல்லிதாக குறட்டை விடுவது போல படுத்திருக்கிறது. இந்த வீடியோவை கண்ட இணையவாசிகள் பலரும் தங்களது வீட்டில் உள்ள பெரியவர்கள் இப்படித்தான் தூங்கும் போது இருப்பார்கள் என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

இதுபோக, வீடியோவில் இருக்கும் பூனை சத்தமாக குறட்டை விடுவது போல எடிட் செய்து அதனையும் பதிவிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர். அதில் சிலர் அவரவர் நண்பர்களை டேக் செய்து கிண்டலடித்தும் வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com