‘காடுனா புலி, சிங்கம், சிறுத்தை இருக்கும். அதுகூட மானும் இருக்கும்’ இந்த வசனம் அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் கமல் சொல்ல கேட்டிருப்போம். அப்படி ஒரு மானாக வங்க மற்றும் வெள்ளைப்புலிகளுக்கு மத்தியில் நாய் ஒன்று உலவும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது.
அந்த வீடியோவில் 3 வங்கப்புலிகள், 3 வெள்ளைப்புலிகள் என 6 புலிகள் இருக்கும் கூட்டத்தில் ஒற்றையாக குரைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அநாயசமாக அலைந்து திரிந்துக்கொண்டிருக்கிறது ஒரு நாய்.
வீடியோவை பார்த்த அந்த நாயின் நிலை குறித்துதான் அனைவருக்குமே முதலில் எட்டியிருக்கும் எண்ணமாக இருந்திருக்கும். ஆனால் அந்த நாயோ கெத்தாக இங்கும் அங்குமாக திரிகிறது.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் ஒருவேளை புலிகளின் உற்ற நண்பனாக அந்த நாய் இருந்திருக்கக் கூடும் என கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதனிடையே வீடியோ பகிரப்பட்ட Tiger big fan என்ற பக்கத்தில் புலிக்குட்டிகளை ஒரு தாயாக நாயே வளர்த்திருப்பது அத்தனை எளிதான விஷயமாக இருக்காது என கேப்ஷன் இட்டது பார்வையாளர்களை அதிசயிக்க வைத்திருக்கிறது.