திருமண வரவேற்பில் தங்கள் மீதே தீவைத்து ஸ்டண்ட் செய்த மணமக்கள் - வைரல் வீடியோ

திருமண வரவேற்பில் தங்கள் மீதே தீவைத்து ஸ்டண்ட் செய்த மணமக்கள் - வைரல் வீடியோ
திருமண வரவேற்பில் தங்கள் மீதே தீவைத்து ஸ்டண்ட் செய்த மணமக்கள் - வைரல் வீடியோ

ஹாலிவுட் சினிமா காட்சிபோன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்கள்மீதே தீவைத்து ஓடிவந்த வீடியோ இணையத்தை வைரலாக்கி வருகிறது.

ஸ்டண்ட் ப்ரொஃபஷனல்கள் இரண்டு பேர் தங்கள் திருமண நிகழ்ச்சியில் இவ்வாறு செய்திருக்கின்றனர். காபே ஜெச்சோப் மற்றும் அம்பைர் பாம்பைர் இருவரும் ஒரு ஸ்டண்ட் நிகழ்ச்சியில் சந்தித்தபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்கள் திருமண வீடியோவை படம்படித்த புகைப்படக்காரர் ரஸ் பௌவெல் திருமண ஸ்டண்ட் வீடியோவை அவருடைய டிக்டாக்கில், ‘’ப்ரொபெஷனல்ஸ் இருவர் திருமணம் செய்யும்போது’’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, ’’மணமக்கள் இருவரும் முறையாக பயிற்சிபெற்ற ப்ரொஃபெஷனல்ஸ் என்பதால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதை வீட்டில் யாரும் முயற்சிக்க வேண்டாம்’’ என்று எச்சரித்துள்ளார். மணமகள் கையிலுள்ள பூங்கொத்தில் ஆரம்பித்து மணமக்கள் இருவரின் பின்புறமும் தீ பற்றியெரிகிறது. இருவரும் பொறுமையாக நடந்துவந்து குறிப்பிட்ட இலக்கை அடைகின்றனர். அதன்பிறகு தீயணைப்பானை பயன்படுத்தி தீ அணைக்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com