\
Airbag helmet
Airbag helmetX

பைக் விபத்தில் உயிரைக்காக்குமா இந்த ஹெல்மெட்....சீன வீடியோவால் பரபரப்பு

சீனாவில் உருவாக்கப்பட்ட ஹெல்மெட்: விபத்தில் முழு உடலையும் பாதுகாக்கும் தொழில்நுட்பம்?
Published on: 

சீனாவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹெல்மெட் வீடியோ, விபத்தின்போது ஏர்பேக் மூலம் முழு உடலையும் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை காட்டி வைரலாகி வருகிறது. ஆனால், இதன் உண்மைத்தன்மை மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

செய்தியாளர் - M.மீரா

சீனாவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும், ஹெல்மெட் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

விபத்து நேரத்தில் ஏர்பேக் மூலம் இருசக்கர வாகன ஓட்டியின் முழு உடலையும் பாதுகாக்கும் ஹெல்மெட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது.

வீடியோவில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழும்போது, அவர் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் இருந்து ஏர்பேக் விரிவடைந்து அவரது முழு உடலையும் சுற்றிப் பாதுகாக்கிறது. இதன் மூலம் சாலையில் விழும்போது ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும் எனக் காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தை சீனாவின் லான்சி யெமா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மற்றும் யான்ஃபெங் நிறுவனம் இணைந்து உருவாக்கியதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும், வீடியோவில் ஹெல்மெட்டில் இத்தாலியின் ஏஜிவி நிறுவனத்தின் லோகோவும், ஓட்டுநர் அணிந்திருக்கும் உடையில் டைனீஸ் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளன. இதனால், வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த ஹெல்மெட் தொடர்பாக அதிகாரப்பூர்வ தயாரிப்பு விவரங்கள், பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது சோதனை முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Airbag helmet
Nvidia CEO ஜென்சென் ஹுவாங் - மனிதநேயத்தின் உதாரணம்... இந்தியப் பெண் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!