சிலி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு தினப் பேரணியில் வன்முறை

சிலி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு தினப் பேரணியில் வன்முறை

சிலி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு தினப் பேரணியில் வன்முறை
Published on

சிலியில் ஆட்சி கவிழ்ப்பு தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்றப் பேரணியில் வன்முறை வெடித்தது. 

சிலி நாட்டில் 1973 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் கற்களையும், பாட்டில்களையும் காவல்துறையினர் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. சிலியில் 1973 முதல் 1990 வரையிலான சர்வதாதிகார ஆட்சியில் 3 ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டனர். 28 ஆயிரம் பேர் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com