உலகம்
ராகினேவில் வன்முறை குறைந்துவிட்டது: ஐ.நா. சபையில் மியான்மர் தகவல்
ராகினேவில் வன்முறை குறைந்துவிட்டது: ஐ.நா. சபையில் மியான்மர் தகவல்
சர்வதேச நாடுகளின் கண்டனத்துக்குப் பின் ராகினே மாகாணத்தில் வன்முறை குறைந்திருப்பதாக ஐ.நா. பொது அவை கூட்டத்தில் மியான்மர் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொது அவை கூட்டத்தில் பங்கேற்றுள்ள மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு பதிலாக துணை அதிபர்களில் ஒருவரான ஹென்றி, கடந்த 5 ஆம் தேதி முதல் ராகினேவில் வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என தெரிவித்தார். ஏராளமான ரோஹிங்ய இஸ்லாமியர்கள் தொடர்ந்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்து வருவதன் காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.