மியான்மரில் வன்முறை: 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மியான்மரில் கடந்த இரு தினங்களாக நீடித்து வரும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வங்கதேச எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ரோஹிங்யா இன முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து மியான்மரின் வடமேற்கு மாகாணமான ரக்கைனில் வசிக்கும் ரோஹின்கியா இன மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது. ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நீடித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை கடந்த 2 நாட்களில் நடைபெற்ற வன்முறையில் 104க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்குள்ள கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து வங்கதேச எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களை வங்கதேச பாதுகாப்புப் படையினர் மீண்டும் அவர்களது நாட்டுக்கு செல்லும்படி வற்புறுத்துவதால் ரோஹின்கியா மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.