தென்னாப்ரிக்கா: முன்னாள் அதிபரின் சிறையை கண்டித்து கலவரம்; 70 பேர் உயிரிழப்பு

தென்னாப்ரிக்கா: முன்னாள் அதிபரின் சிறையை கண்டித்து கலவரம்; 70 பேர் உயிரிழப்பு
தென்னாப்ரிக்கா: முன்னாள் அதிபரின் சிறையை கண்டித்து கலவரம்; 70 பேர் உயிரிழப்பு

தென்னாப்ரிக்காவில், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

10 ஆண்டுகள் அதிபராக இருந்த ஜேக்கப், மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு 15 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜேக்கப் கடந்த வாரம் சரணடைந்து சிறைக்கு சென்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்ரிக்கா முழுவதும் உள்ள பெரிய வணிக வளாகங்கள், சேமிப்பு கிடங்குகள் சூறையாடப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

முக்கிய வியாபார நகரான டர்பனில் ஒரு சேமிப்பு கிடங்குக்குள் புகுந்த கலவரக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்ததோடு, கிடங்குக்கும் தீ வைத்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். கலவரங்களை ஒடுக்க காவல்துறைக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுவரை 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர் போராட்டங்கள் காரணமாக உணவு பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com