\
காணாமல் போனவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு

காணாமல் போனவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு

காணாமல் போனவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு
Published on

இந்தோனேஷியாவில் 7 மீட்டர் நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து காணாமல் போன நபர் பிணமாக மீட்டெடுக்கப்பட்டுளார்.

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு கிராமத்தில், அக்பர் சலுபிரோ என்ற 25 வயது இளைஞர் அறுவடைக்காக வயலுக்கு சென்றார். ஆனால் அவர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை தேடிய நண்பர்கள் அவரது தோட்டத்திற்கு பின்புறத்தில் ஒரு பெரிய நகர முடியாத மலைப்பாம்பை கண்டனர்.

சந்தேகமடைந்த கிராமத்தினர், மலைப்பாம்பை 18 இன்ச் கத்தியை கொண்டு கிழித்தனர். அப்போது அக்பர் உயிரிழந்த நிலையில் பாம்பின் வயிற்றின் உள்ள இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய அக்பரின் நண்பர் ஒருவர், அக்பரின் அணிந்திருந்த காலணியின் வடிவம் பாம்பின் வயிற்றில் துருத்திக் கொண்டு தெரிந்ததைக் காண முடிந்ததாகவும் அதனால் சந்தேகம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com