வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில், மாசுபாட்டை கட்டுப்படுத்த வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் வசிக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கார்களை விட அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஹனோ நகரில் மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. மேலும், இரண்டு நகர்ப்புற ரயில்வே தடங்களுக்கான கட்டுமானப் பணிகள், துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில், இந்த தடங்களில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.