உயிரை காப்பாற்ற மாடியிலிருந்து குதித்த நபரின் வீடியோ
சீனாவின் 23 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மேல்தள மாடியிலிருந்து குதித்த நபரின்
வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சீனாவின் சோங்கிங் நகரத்தில் உள்ளது 23 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட குடியிருப்பு. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து
வருகின்றனர். நேற்று முந்தைய தினம், இந்த குடியிருப்பின் மேல் தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மடமடவென பரவிய தீ, அந்த மாடி
முழுவதும் பரவியது. அப்போது அந்த வீட்டினுள் இருந்த நபர் ஒருவர், தீயில் மாட்டிக் கொண்டு நீண்ட நேரம் போராடி உள்ளார். மேலும், தீயணைப்பு
துறையினர் வருவதற்குள் அங்கிருந்து வெளிவர நினைத்த அவர், பால்கனி வழியாக கீழே உள்ள மாடிக்கு குதிக்க முயற்சித்தார்.
குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்த அவரின் கை மற்றும் தோள் பட்டையில் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. இருப்பினும் தனது
கடுமையான முயற்சியால் கிழே உள்ள மாடியின், கண்ணாடி ஜன்னலை உடைத்து அவர் உள்ளே விழுந்து உயிர் தப்பினார். அதன் பின்பு, சம்பவ
இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். மேலும் அந்த நபருக்கு மேல் சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர். காயங்களுடன் அந்த நபர் உயிர் பிழைத்துள்ளார். தீயில் எரிந்துக் கொண்டிருந்த மாடியில் இருந்து, துணிச்சலாக கீழே குதித்த அந்த நபரின்
வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.