துருக்கி: நடுவானில் பாராகிளைடிங் வீரர்கள் திடீரென மோதல்

துருக்கி: நடுவானில் பாராகிளைடிங் வீரர்கள் திடீரென மோதல்

துருக்கி: நடுவானில் பாராகிளைடிங் வீரர்கள் திடீரென மோதல்
Published on

துருக்கியில் நடந்த வான்விளையாட்டுப் போட்டியில், பாராகிளைடிங் சென்ற இரண்டு வீரர்கள் நடு வானில் மோதி, கடலில் விழுந்த பரபரப்பான காட்சி வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவிலான வான்விளையாட்டுப் போட்டியில், 60 நாடுகளைச் சேர்ந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாராகிளைடிங் வீரர்கள் பங்கேற்றிருந்தனர். ஏராளமானோர் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு பேர் நடுவானில் மோதினர். இதில் கடலில் விழுந்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதே விளையாட்டில் வானில் பறந்து கொண்டிருக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பெண், கடலில் விழுந்தார். உடனடியாக அவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com