கடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்

கடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்

கடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்
Published on

நீருக்கிடையில் வாழும் நகரம் என்று பெயர் பெற்ற இத்தாலியின் வெனிஸ் நகரம் தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது.

இத்தாலியின் பாரம்பரிய நகரம் வெனிஸ். வடமேற்கு பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் உள்ள வெனிஸ், கால்வாய்களின் நகரம் என்றழைக்கப்படுகிறது.118 சிறு தீவுகளால் ஆன இந்த நகரத்தை கால்வாய்கள்தான் பிரிக்கின்றன. நூற்றுக்கணக்கான பாலங்கள் நகரின் ஒவ்வொரு பகுதிகளையும் இணைக்கின்றன. இந்த சிறப்பாலும், அழகிய கட்டடக் கலையாலும் உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வெனிஸ் நகரம் தற்போது வரலாறு காணாத வெள்ளத்தால் உரு தெரியாமல் மாறியுள்ளது.

தொடர் மழையால் நகரின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்கள், சுற்றுலா தலங்கள், கட்டடங்கள், தெருக்கள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஓட்டலில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற ராணுவத்தினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காகத் தரும் விலை அதிகமாக இருக்கும் என்றும் வெனிஸ் நகர மேயர் லூய்கி புருக்னேரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதிகப்பட்சமாக வெனிஸ் நகரில் நீர் மட்டம் 1.87 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது என்று கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு பிறகு நகரத்தை தாக்கிய 2-ஆவது பெரிய வெள்ளமாகும்.

கடந்த 1966ஆம் ஆண்டு 1.94 மீட்டர் உயரத்துக்கு அலைகள் வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிஸ் நகருக்கு தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மேலும் மழைக்கான வாய்ப்பு உள்ள நிலையில், நீர் மட்டத்தில் அளவு தொடர்ந்து உயரம் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com