”மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை; காஸா மக்களின் இன அழிவை தடுத்து நிறுத்துங்கள்” - வெனிசுலா அதிபர்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையே நிலவி வரும் மோதலை உடனிடியாக கட்டுபடுத்த வேண்டும் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ முகநூல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையே நிலவி வரும் கடும் மோதலுக்கு ஏராளமான மக்களின் அழுகையையும் பிரிவினையும் உயிரையுமே பதிலாக கிடைக்கிறது. அப்பாவி மக்கள்தான் இதன் பேரில் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் தங்களின் அடையாளத்தையும் சொந்தங்களையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் ஹமாஸ் படையினர் ராக்கெட்டுகளை வீசி தொடங்கினர். இத்தாக்குதலுக்கு இப்பேரழிவு முதல் கட்டம் இல்லை. எத்தனையோ வருடங்களாக தீராத பகையாக தொடர்ந்து கொண்டிருக்கும் சம்பவம் இது. இஸ்ரேயல் பாலஸ்தீனத்திற்கிடையேயான பிரச்னை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே பல நாட்டு தலைவர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையாகவும் தற்போதுள்ள சூழலில் நிலவி வரும் ஒரு கோரிக்கையாகவும் உள்ளது.

இது குறித்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ கூறுகையில், ”மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை. அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, காஸா தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அந்த சின்ன இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ முகநூல்

கொடுமைகளுக்கு உள்ளாவது, வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பலியாவது, கொல்லப்படுவது என அந்த மக்கள் தசாப்தங்களாக சொல்லில் அடங்கா துயரங்களை மட்டுமே அனுபவித்து வருபவர்கள். காஸாவின் புனிதமான மக்கள் அவர்கள்.

உலகம் இனியாவது இதுகுறித்துப் பேச வேண்டும். காஸா மக்களின் இன அழிவை தடுத்து நிறுத்த வேண்டும். பாலஸ்தீன மக்களை இன அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். கிறிஸ்துவ உலகம், இஸ்லாமிய உலகம், யூத உலகம் , என எல்லோரும் பேச வேண்டும். இப்போதாவது பேசுங்கள். உலகமறிய நடந்துகொண்டிருக்கும் இந்த காஸா மக்களின் இன அழிவை தடுத்து நிறுத்துங்கள்.” என்று தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com