எல்லைகளை மூடிய வெனிசுலா அதிபர் - தடுக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள்

எல்லைகளை மூடிய வெனிசுலா அதிபர் - தடுக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள்
எல்லைகளை மூடிய வெனிசுலா அதிபர் - தடுக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள்

வெனிசுலா அதிபர் மதுரோ எல்லைப் பகுதிகளை மூடிவிட்டதால், வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் உதவிப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெனிசுலாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார சீர்குலைவினால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இடைக்கால அதிபராக தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்ட கைடோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

இதற்காக வெனிசுலாவின் அண்டை நாடான கொலம்பியாவில் உதவி மையங்களையும் கைடோ திறந்து வைத்தார். அமெரிக்கா மற்றும் போர்ட்டோ ரிகோவில் இருந்து உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தச்சூழலில், வெளிநாட்டு உதவிகளை மறுத்து வரும் அதிபர் மதுரோ, வெனிசுலாவின் எல்லைப் பகுதிகளை மூட உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உதவிப் பொருட்களை எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உதவிப் பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த வெனிசுலா மக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com