"அவசரநிலை பிரகடனம் எதற்கும் தீர்வாகாது" - இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கண்டனம்

"அவசரநிலை பிரகடனம் எதற்கும் தீர்வாகாது" - இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கண்டனம்
"அவசரநிலை பிரகடனம் எதற்கும் தீர்வாகாது" - இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கண்டனம்

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது குறித்து ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.

இலங்கை இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அவசரநிலை பிரகடனம் செய்வதால் நாட்டின் எந்த பிரச்னைக்கும் தீர்வு காணமுடியாது என்று இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாடான இலங்கையில், மக்கள் தங்கள் உரிமைக்காக கடந்த ஒரு மாதகாலமாக அமைதியான வழிகளில் போராடிக்கொண்டிருப்பதாகவும் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராடும் இலங்கை மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கூறியுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் நீண்டகால தீர்வைத்தான் மக்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும், அவசரநிலை பிரகடனம் எதற்கும் தீர்வாகாது என்றும் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகளும், இலங்கை மனித உரிமை ஆணையமும், அவசரநிலை பிரகடனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்கலாம்: தீவிரமடையும் மக்கள் போராட்டம் - இலங்கையில் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com