கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு.. உலக சுகாதார அமைப்பு கவலை!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு.. உலக சுகாதார அமைப்பு கவலை!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு.. உலக சுகாதார அமைப்பு கவலை!

ஒவ்வொரு நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை சம அளவில் விநியோகிக்க வேண்டும் என்று உற்பத்தி நிறுவனங்களுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்து அளிப்பதில் தார்மீக தோல்வியை சந்தித்து வருகிறோம் என கவலை தெரிவித்துள்ளார், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ். உலகில் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதில் தங்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கும் ‘தடுப்பூசி தேசியவாதம்’ முழு வீச்சில் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வருமானம் உள்ள 49 நாடுகளில் 3.90 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஒரு பின்தங்கிய நாட்டில் 25 மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றும் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு டெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும் என்று கூறிய அவா், அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று வலியுறுத்தினாா். உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக பின் தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் சென்று சேர் வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com