இங்கிலாந்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்குத் தடை: அக்டோபர் 1 முதல் நடைமுறை

இங்கிலாந்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்குத் தடை: அக்டோபர் 1 முதல் நடைமுறை
இங்கிலாந்தில்  பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்குத் தடை: அக்டோபர் 1 முதல் நடைமுறை

உலக நாடுகள் பலவற்றில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்கூட பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை நீடித்துவருகிறது. தற்போது இங்கிலாந்து நாட்டில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பானங்களைக் கலக்கும் குச்சிகள், பட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்த அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து நாட்டில் 4.7 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், 316 பிளாஸ்டிக் குச்சிகள் மற்றும் 1.8 பில்லியன் பிளாஸ்டிக் தண்டுடன்கூடிய பட்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கே ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக அக்டோபர் 1ம் தேதி முதல் தடை அமலுக்கு வரவுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையில் இந்த முயற்சி முக்கியமாக கருதப்படுகிறது. நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

"இங்கிலாந்தில் ஸ்ட்ராக்கள் போன்றவற்றுக்கான தடையின் மூலம் பிளாஸ்டிக் மாசுகளுக்கு எதிரான எங்களுடைய போரில் அடுத்த அடியை எடுத்துவைத்துள்ளோம். இந்த சர்வதேச முயற்சிகளில் நாங்கள் முன்னோடியாக இருக்கிறோம்" என்கிறார் சுற்றுச்சூழல் செயலர் ஜார்ஜ் எஸ்டைஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com