eric trumpஎக்ஸ் தளம்
உலகம்
அமெரிக்கா | அதிபர் பதவியில் அமர விருப்பம்.. எரிக் ட்ரம்ப் சூசகம்!
டொனால்டு ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப்பும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப்பும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டியில் அரசியல் பாதை தனக்கு எளிதான ஒன்று என்றும் ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் எரிக் ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போதுள்ள தலைவர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகவும் அவர்கள் பணியை தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்றும் எரிக் ட்ரம்ப் கூறினார்.
eric trumpx page
ட்ரம்ப்பின் மற்ற பிள்ளைகளான ஜூனியர் ட்ரம்ப்பும் இவான்காவும் ஏற்கனவே அரசியலில் உள்ளனர். எரிக் ட்ரம்ப் தன் தந்தையின் வணிகங்களை கவனித்து வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் அமரும் ஆசையை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.