அமெரிக்கா அறிவித்த இறக்குமதி வரி.. யார் யாருக்கு எவ்வளவு?
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அடுத்து இந்தியாவுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 14 நாடுகளுக்கு வரி விதிப்பு தொடர்பான கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரி விகித அறிவிப்புடன் கூடிய கடிதங்கள் சென்றுள்ளன.
அமெரிக்காவுடன் லாபகரமான வர்த்தகம் புரிய விரும்பினால் அதற்கான விலையை பிற நாடுகள் தந்துதான் ஆகவேண்டும் என்றும் அதிபர் தெரிவித்தார். தற்போது தாங்கள் புரியும் சர்வதேச வர்த்தகம் பிற நாடுகளுக்கு சாதகமாகவும் அமெரிக்காவுக்கு பாதகமாகவும் இருப்பதாகவும் கூறும் ட்ரம்ப் அதை சமப்படுத்தும் வகையில் வரி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
யார் யாருக்கு எவ்வளவு வரி?
மியன்மார் - 40%
லாவோஸ் - 40%
தாய்லாந்து - 36%
கம்போடியா - 36%
வங்கதேசம் - 35%
செர்பியா - 35%
இந்தோனேசியா - 32%
தென்னாப்ரிக்கா - 30%
போஸ்னியா - 30%
ஜப்பான் - 25%
தென் கொரியா - 25%
மலேசியா - 25%
கஜகிஸ்தான் - 25%
டுனிசியா - 25%