போரில் உயிர் நீத்த அமெரிக்க வீரர்களுக்கான நினைவு நாள் நிகழ்வில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது.
ஆர்லிங்டன் தேசிய நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த ட்ரம்ப், அங்கு கூடியிருந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கன் போரில் தனது மகனைப் பறிகொடுத்த ஒரு தாய் ட்ரம்புக்கு அருகே வந்து சில சொற்களைப் பகிர்ந்து கொண்டார். ’போரில் உயிர் துறந்தாலும் தன்னை யாரும் மறந்துவிட மாட்டார்கள்’என்று நம்புகிறேன் என்று தனது மகன் கூறிச் சென்றதாக ட்ரம்பிடம் அவர் தெரிவித்தார். அது ட்ரம்பையும், கூடியிருந்தவர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.