\
 ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய அமெரிக்கா
ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய அமெரிக்காweb

21-ம் நூற்றாண்டில் முதல்முறை.. ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய அமெரிக்கா! பின்னணியில் ஈரான்?

இந்த நூற்றாண்டில் முதல் முறையாக அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இருந்த அமெரிக்கா, 21-ம் நூற்றாண்டில் முதல்முறையாக தைவானுக்கான அதிமுக்கிய ஆயுத ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 1.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம், ஈரான் மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட ஆயுதப் பற்றாக்குறையும், எதிர்கால இராணுவத் தயாரிப்பும் காரணமாக நிறுத்தப்பட்டதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உருவெடுத்தது. அப்போதில் இருந்து அமெரிக்காவின் முக்கிய வருமானம் ஈட்டும் வழியாக ஆயுத ஏற்றுமதி இருந்து வருகிறது.

நேட்டோ நாடுகள் முதல் ஆப்பிரிக்க நாடுகள் வரை அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியை ஜோராக நடத்தி வந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் போர்கள் ஏற்பட முக்கிய காரணமாகவும் அமெரிக்காவின் இந்த ஆயுத ஏற்றுமதியே திகழ்ந்து வந்தது.

அமெரிக்கா ராணுவம்
அமெரிக்கா ராணுவம்web

இது தவிர சோவியத் எதிர்ப்பை மையமாக வைத்து ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதியை செய்து வந்தது. அதே போல சீனாவின் அச்சுறுத்தலை காரணமாக வைத்து தைவானுக்கும் ஆண்டுதோறும் ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா செய்து வந்தது.

ஆனால் இந்த 21-ம் நூற்றாண்டில் முதல்முறையாக தைவானுக்கான அதிமுக்கிய ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. தைவானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 1.16 லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி செய்ய அமெரிக்கா ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

 ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய அமெரிக்கா
ட்ரம்பின் மகளுக்குக் குறி.. சபதமிட்ட ஈரான் பயங்கரவாதி.. சதித் திட்டம் தீட்டியது ஏன்?

இந்த ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கக் கடற்படையின் தற்காலிகச் செயலாளர் ஹங் காவோ (Hung Cao), அமெரிக்க நாடாளுமன்றச் செனட் கமிட்டி விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவிடம் உள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதப் பற்றாக்குறையைச் சமாளிக்கவே இந்தத் தற்காலிக நிறுத்தம் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர்
அமெரிக்கா - ஈரான் போர்web

அமெரிக்காவின் இந்த ஆயுதப் பற்றாக்குறைக்கு அந்நாடு ஈரான் மீது நடத்திய தாக்குதலே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஈரான் மீதான போர் காரணமாக அமெரிக்கா தன்னிடம் கைவசம் இருந்த ஏராளமான ஆயுதங்களை இந்தப் போரில் பயன்படுத்தியிருந்தது. அதோடு ஈரான் மீது அடுத்தகட்ட தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அப்படி மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடந்தால் அதற்கும் அமெரிக்காவிற்கு கூடுதலான ஆயுதங்கள் தேவைப்படும். இதன் காரணமாகவே தைவானுக்கு ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய அமெரிக்கா
60 நாள்தான் டைம்.. கிரீன் கார்டுக்கும் புது ரூல்ஸ்.. அடுத்தடுத்து பிடியை இறுக்கும் US!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com