கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்எக்ஸ் தளம்

“உங்கள் அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது” - ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை உரையாற்றிய கமலா ஹாரிஸ்!

அதிபர் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி, இறுதியில் தோல்வியைத் தழுவிய கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றியுள்ளார்.
Published on

அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி, இறுதியில் தோல்வியைத் தழுவிய கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றியுள்ளார்.

அதில், “நான் உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். உங்கள் அதிகாரத்தை யாரும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது. நவம்பர் 5க்கு முன்பு, உங்களிடமிருந்த அதே சக்தி இப்போதும் உங்களிடம் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த அதேநோக்கம் இப்போதும் உங்களிடம் உள்ளது. மேலும், ஈடுபடும் திறனும் உங்களிடம் உள்ளது. உங்களின் அதிகாரத்தை யாரையும் அல்லது எந்தச் சூழலிலும் உங்களிடமிருந்து பறிக்க அனுமதிக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்
”யாரும் விரக்தியடைய வேண்டாம்” - தோல்வி குறித்து கமலா ஹாரிஸ்! அதிருப்தியில் ஹாலிவுட் பிரபலங்கள்!

இந்த உரை, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தவிர, அவரது உரைக்கு, பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: சீனா உட்பட 3 நாடுகளுக்கு செக்.. பதவியேற்றவுடன் முதல் கையெழுத்து இதுதானா? அதிரடியில் இறங்கிய ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com