அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...!
அமெரிக்காவில் ரூபாய் 25 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை ஆன்லைனில் துப்பாக்கிகள் விற்பனையாகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளதால் ஆன்லைனிலும் துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதை குறித்து கொஞ்சம் விரிவாக பேசுகிறது இந்தக் கட்டுரை.
Hyatt guns,grab gun,impact guns இவையெல்லாம் ஆன்லைனில் துப்பாக்கிகளை விற்கும் அமெரிக்க நிறுவனங்கள். இவற்றைப் போல நூற்றுக் கணக்கான நிறுவனங்களும் கடைகளும் அமெரிக்காவில் இயங்கி வருகின்றன. 25 ஆயிரம் ரூபாய் முதல் சில லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட இவற்றை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து கொடுத்து விடுவார்கள். பயன்படுத்திய துப்பாக்கிகள் என்றால் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும். தேவைப்பட்டால், வீட்டிலேயே கூட துப்பாக்கியைத் தயாரித்துக் கொள்ள முடியும். இதற்கான வழிகாட்டி வீடியோக்களும் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் சட்டமே அனுமதி வழங்கியிருக்கிறது.
துப்பாக்கிகளைத் தயாரிப்பது, மற்றவர்களுக்கு வழங்குவது, அழிப்பது போன்றவற்றையும் சட்டப்பூர்வமாகவே செய்ய முடியும். இதற்கான சட்டங்களை ATF என்ற அமைப்பு அமல்படுத்தி வருகிறது. இந்தச் சட்டங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலமும், மத்திய ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசங்களும் மாறுபட்ட பிரத்யேகமான விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் 44 மாநிலங்கள் துப்பாக்கி வைத்திருப்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்ட உரிமை என வரையறுத்திருக்கின்றன. கலிஃபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சில மாநிலங்களில் துப்பாக்கியை வாங்குவதற்கு உரிமம் பெறுவதுகூட அவசியமில்லை.
பொது இடங்களுக்கு துப்பாக்கியை மறைத்து எடுத்துச் செல்வது அமெரிக்கா முழுவதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சில மாநிலங்களில் வெளிப்படையாகவே துப்பாக்கியைக் கொண்டு போகலாம். அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விவரங்களின்படி அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் துப்பாக்கி வைத்திருக்கிறார். பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள துப்பாக்கிகளின் எண்ணக்கை 30 கோடி என மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கொல்லப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்படுவோரைக் காட்டிலும் இது மிகக் குறைவு. கடந்த ஆண்டில் மட்டும் 353 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 62 சம்பவங்கள் பள்ளிகளில் நடந்திருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,223. அதிபர் ஒபாமா பதவியேற்ற பிறகு 15 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்கா இதுவரை நடத்திய போர்களில் கொல்லப்பட்டவர்களைக் காட்டிலும் சாதாரணமாக நிகழும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களும், முற்றுபுள்ளி வைக்கும் வகையில் 3டி பிரிண்டரில் துப்பாக்கி தயாரிப்பதற்குத் பயன்படும் மென்பொருளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நீதிமன்றம் கருத்திற்கு அமெரிக்காவில் வலுச்சேர்த்து வருகின்றன, மேலும் இந்த மென்பொருளை வெளியிட தொடர்புடைய நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.