usa and china reach deal to slash reciprocal tariffs by 115 percentage
ட்ரம்ப், ஜின்பிங்முகநூல்

சீனா - அமெரிக்கா | முடிவுக்கு வரும் வர்த்தகப் போர்.. 115% குறைக்க ஒப்புதல்?

பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக ஜெனீவாவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், கடந்த மாதம் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். இருப்பினும், அவ்வரிவிதிப்பைத் தொடங்குவதற்கு முன்பே வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார்.

பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது.

usa and china reach deal to slash reciprocal tariffs by 115 percentage
சீனா, அமெரிக்காஎக்ஸ் தளம்

இந்த வரி விகித உயர்வால், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதனால், அவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமாய் நடைபெற்றது. இந்த நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிக்க, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

usa and china reach deal to slash reciprocal tariffs by 115 percentage
”ஒருபோதும் மண்டியிடாது” - அமெரிக்காவுக்கு சீனா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை!

இதைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக ஜெனீவாவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்குள் (மே 14) இருதரப்பிலும் 115% வரியைக் குறைக்க ஒப்பந்தம் செய்துள்ளன. சீனாவின் 145% மீது அமெரிக்க விதித்த வரியில் 30% சதவிகிதம் குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அமெரிக்கப் பொருட்களுக்கான 125% சீன வரிகள் 10% ஆகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com