\
US Woman Wins $2 Million Lottery During Office Lunch Break
Model imagegoogle gemeni

வேலையில் மனஅழுத்தம்| உணவு இடைவேளையில் நிகழ்ந்த அதிர்ஷ்டம்.. ஒரே நிமிடத்தில் கோடீஸ்வரராக மாறிய பெண்!

வெர்ஜீனியா மாநில லாட்டரி விதிகளின்படி, வெற்றியாளர்கள் தங்கள் பெயரை வெளியிடாமல் இருக்க உரிமை உண்டு என்பதால், அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
Published on: 

அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கைவிடுவதில்லை. ஒருவேளை, அது கைகூடும் பட்சத்தில் அவர்களின் தலையெழுத்தே மாறிவிடும். ஆனால், சில நிமிடங்களில் லாட்டரி சீட்டு மூலம் பல கோடி ரூபாயை வென்றபோதும், அந்த நபர் அமைதியாக மீண்டும் வேலைக்குச் சென்றிருப்பது உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் (Portsmouth)பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அன்றைய தினம் வேலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மதிய உணவு இடைவேளையின்போது நோர்போக் நகரில் உள்ள 'லவ் ஃபுட் மார்ட்' என்ற கடையில் நுழைந்த அவர், மன அழுத்தத்தைக் குறைக்க 20 டாலர் சுமார் ரூ.1,916 கொடுத்து 'பிளாட்டினம் 7ஸ்' (Platinum 7s) என்ற ஸ்காட்ச்-ஆஃப் லாட்டரி சீட்டைவாங்கியுள்ளார். கடையிலேயே அவர், அந்தச் சீட்டைச் சுரண்டிப் பார்த்தபோது, அவருக்கு 2 மில்லியன் டாலர் (சுமார் ₹19.16 கோடி) ஜாக்பாட் அடித்தது தெரியவந்தது. ஆயினும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவில்லை. காரணம், அவருடைய மதிய உணவு இடைவேளை முடியும் தருவாயில் இருந்தது. இதனால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் பரிசுச் சீட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு, அமைதியாக மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று அன்றைய பணி நேரத்தை நிறைவு செய்தார். சில நிமிடங்கள் அதிர்ஷ்டஷாலியாக மாறியது குறித்து அந்தப் பெண், ”எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் மீண்டும் வேலைக்குச் சென்று, எதுவுமே நடக்காதது போல இயல்பாக இருக்க வேண்டியிருந்தது. அதிக மன அழுத்தத்தில் இருந்த எனக்கு, அந்த ஒரு நிமிட அதிர்ஷ்டம் வாழ்நாள் முழுமைக்குமான நிம்மதியைத் தந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

Model image
Model imagegoogle gemeni

லாட்டரி விதிகளின்படி 2 மில்லியன் டாலர் தொகையை பெறுவதற்கு அவருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி, 2 மில்லியன் டாலர் தொகையை 30 ஆண்டுகளில் தவணை முறையில் பெறுவதற்குப் பதிலாக, வரி பிடிப்பதற்கு முன்பான ஒரே தவணை ரொக்கப் பணமான $952,000 (சுமார் ₹8 கோடி) பெற அவர் தேர்ந்தெடுத்தார். வெர்ஜீனியா மாநில லாட்டரி விதிகளின்படி, வெற்றியாளர்கள் தங்கள் பெயரை வெளியிடாமல் இருக்க உரிமை உண்டு என்பதால், அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒருசில நிமிடங்களில் கோடீஸ்வரர் ஆனபோதும் அவர் காட்டிய அமைதி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com