கழுத்தை இறுக்கியது மலைப்பாம்பு: இறந்து கிடந்த பெண் வீட்டில் 140 பாம்புகள்!

கழுத்தை இறுக்கியது மலைப்பாம்பு: இறந்து கிடந்த பெண் வீட்டில் 140 பாம்புகள்!

கழுத்தை இறுக்கியது மலைப்பாம்பு: இறந்து கிடந்த பெண் வீட்டில் 140 பாம்புகள்!
Published on

மலைப்பாம்பு கழுத்தை இறுக்கிய நிலையில் இறந்த கிடந்த பெண்ணின் வீட்டில், 140 பாம்புகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள ஆக்ஸ்போர்ட் பகுதியில் வசித்து வந்தவர் லாரா ஹர்ஸ்ட் (Laura Hurst). 36 வயதான இவர் தனது வீட்டில் இறந்துகிடந்ததை அடுத்து போலீசாரும் மருத்துவர்களும் அங்கு சென்றனர். அப்போது அவர் கழுத்தைச் சுற்றி மலைப்பாம்பு ஒன்று கிடந்தது.

அந்த பாம்பு கழுத்தை இறுக்கியதால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருந்தாலும் உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்திருப்பார் என்பது தெரியவரும் என்றனர்.

இந்நிலையில் அவர் வீட்டில் 140 பாம்புகள் இருந்தன. அதில் 20 பாம்புகளை செல்லப் பிராணியாக அவர் வளர்த்து வந்தாராம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com