உலகம்
அமெரிக்காவில் வீசிய ஐடா புயல்: உருக்குலைந்த லூசியானா மாகாணம்
அமெரிக்காவில் வீசிய ஐடா புயல்: உருக்குலைந்த லூசியானா மாகாணம்
அமெரிக்காவில் வீசிய ஐடா புயலால் லூசியானா மாகாணம் உருக்குலைந்துள்ளது.
புயல் கரையை கடந்தப்போது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ் நகரம் பெரியளவில் பாதிக்கப்பட்டு, மின் கம்பங்களும் மரங்களும் சாய்ந்ததால் மின் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொட்டிய பெரு மழையால் நகரின் பெரும் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
எனினும் புயல் தாக்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக அதிகம் பாதிக்கும் பகுதியாக கருதப்பட்ட இடங்களில் வசிப்போர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். எனினும் லூசியானா ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய நீண்டகாலம் பிடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டில் தாக்கிய கத்ரீனா புயலுக்கு பிறகு தற்போது சக்தி வாய்ந்ததாக ஐடா புயல் கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே லூசியானா மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு விரைவாக மேற்கொள்ளும் என அதிபர் பைடன் உறுதியளித்தார்.