அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “டிக்டாக்கை அமெரிக்காவில் இருந்து தடை செய்கிறோம்.  டிக்டாக் ஆஃப் மூலம் சீன உளவுத்துறை அதிகாரிகள், உளவு பார்க்க நேரிடலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக. இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் 47 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com