\
US tennessee girl death row inmate wakes up
Christa Pikereuters

2 முறை விஷ ஊசி.. சுயநினைவுக்குத் திரும்பிய பெண்.. அமெரிக்காவில் அதிசயம்!

இதற்கிடையே, அவருடைய வழக்கு விசாரணை டேவிட்சன் கவுண்டி சான்சரி நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
Published on: 
Summary

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தப்பட்டது. இதிலிருந்து தப்பிப் பிழைத்த அவர், ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு தற்போது சுயநினைவு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்ற எதிர்கொண்ட முதல் பெண்மணி க்ரிஸ்டா பைக் ஆவார். 1995-ஆம் ஆண்டு டென்னசியின் நாக்ஸ்வில்லில் அமைந்திருந்த 'ஜோப் கார்ப்ஸ்' பயிற்சி மையத்தில், க்ரிஸ்டா பைக்வுக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தனது சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்தார். 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இவ்வழக்கின் முடிவில், நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குற்றத்தின்போது 18 வயதாக இருந்த க்ரிஸ்டாவுக்கு பைபோலார் கோளாறு, பிடிஎஸ்டி போன்ற தீவிர மனநலப் பாதிப்புகள் மற்றும் சிறுவயதில் நேர்ந்த கொடுமைகள் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது என்றும், 18 வயதில் மூளை வளர்ச்சி முழுமையடையாததால் அவருக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வாதிட்டனர். மேலும், தாம் செய்த குற்றத்திற்காக வருந்துவதாகவும், சிறுவயது மனநலப் பாதிப்பால் நேர்ந்த தவறு இது என்றும் கூறி ஆளுநரிடம் கருணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

us
usreuters

ஆனால், மாகாண ஆளுநர் இந்தக் கருணை மனுவை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து க்ரிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற சிறை அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அப்போது சிறையறையில் அவருக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டது.

பொதுவாக, விஷ ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் இதயம் துடிப்பது நின்றுவிடும். ஆனால் அவருக்கு முதல் முறை ஊசி செலுத்தப்பட்டு 3 நிமிடங்கள் கழித்து பார்த்தபோது, அவர் இறக்கவில்லை என்பதும், அவரிடம் இருந்து குறட்டை சத்தம் வந்ததும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவருக்கு இரண்டாவது முறையாகவும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் இரண்டாவது முறையும், சுமார் 40 நிமிடங்கள் வரை காத்திருந்தபோதும் அவரது உயிர் பிரியவில்லை. மாறாக அவர் சுவாசித்துக்கொண்டே இருந்தார்.

Christa Pike
Christa Pikereuters

இதனால் அவருக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பிற்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர், சுயநினைவு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது வழக்கறிஞர்கள், “எதிர்பாராத விதமாக, கிறிஸ்டா பைக் சுயநினைவுடன் இருக்கிறார், பேசுகிறார், மேலும் அவருக்குத் தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரது நிலைமை நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் குணமடைய நீண்ட காலம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அவருடைய வழக்கு விசாரணை டேவிட்சன் கவுண்டி சான்சரி நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com