அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Published on

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com