ஹுசைன் ராணாவை இந்தியா கொண்டுவர அமெரிக்க நீதிமன்றம் அனுமதி! நிரவ் மோடி உள்ளிட்ட யார், யார் மீதம்?
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட சிலர் இந்திய தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களை சட்டவிதிமுறைகளைத் தாண்டி அவர்களை இந்தியா கொண்டு வருவது சவாலாகவே உள்ளது.
2008 ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தஹாவூர் ஹுசைன் ராணா, அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். இவரை இந்தியா கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், தான் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தப்பித்து வந்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தஹாவூர் ஹுசைன் ராணானின் தண்டனைக்கு எதிரான மறு ஆய்வு கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் ராணாவை நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ராணா இந்தியா கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணாவைத் தவிர, சட்டங்களில் இருந்து தப்பிக்க தப்பியோடிய பல குற்றவாளிகளை இந்தியா திரும்ப அழைத்து வர, இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தப்பியோடியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளிவந்த நிலையில், குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு "பாதுகாப்பான புகலிடமாக" அமெரிக்கா இருக்கிறது.
வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்களின் முக்கியப்பட்டியல்
தஹாவூர் ஹுசைன் ராணா
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய தொழிலதிபரான ராணா, 160 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலில் அவரது பங்களிப்பிற்காக தேடப்பட்டு வருகிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ மருத்துவரான அவருக்கு 2008 தாக்குதல்கள் பற்றி முன்பே தெரிந்திருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு டென்மார்க்கில் தீவிரவாத சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கைத் தவிர, லஷ்கர்-இ-தொய்பாவுக்கு (எல்.ஈ.டி) பொருளுதவியுடன் உதவியதற்காக அவர் குற்ற்ம் சாட்டப்பட்டுள்ளார். சமீபத்திய அறிக்கையின் படி அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி அளித்துள்ளது
அர்ஷ் டல்லா
தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் புலிப்படையின் உண்மையான தலைவரான காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் கில் அலியா அர்ஷ் டல்லா கனடாவில் உள்ளார். இவர் இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அவர் ஜனவரி 2004 இல் "பயங்கரவாதியாக" அறிவிக்கப்பட்டார். அவர் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பில் இருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
அன்மோல் பிஷ்னோய்
அன்மோல் பிஷ்னோய் லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரர் ஆவார், அவர் குஜராத்தில் உள்ள ஒரு சிறையில் இருந்து பயங்கரமான பிஷ்னோய் கும்பலை நடத்திவருகிறார். பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் அரசியல்வாதி பாபா சித்திக் கொலைகள் உட்பட பல முக்கிய வழக்குகளுக்காக அவர் இந்தியாவில் தேடப்படுகிறார். கடந்த நவம்பரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக அன்மோல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து காவலில் வைக்கக் கோரிய போதிலும், அவரை அவ்வளவு சீக்கிரம் நாடு கடத்த வாய்ப்பில்லை என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விஜய் மல்லையா
9,000 கோடிக்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கை எதிர்கொண்டுள்ள மது வியாபாரி விஜய் மல்லையா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி தற்போது இங்கிலாந்தில் உள்ளார். தற்போது செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரிவுக்குப் பிறகு மோசடி செய்ததற்காக அவர் இந்தியாவில் தேடப்படுகிறார். அவர் 2019 இல் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டார். மல்லையாவின் காவலுக்காக இந்தியா நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, அது விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. ரூ.180 கோடி கடனை திருப்பி செலுத்தாத தனி வழக்கில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது.
நிரவ் மோடி
14,000 கோடி PNB கடன் மோசடி வழக்கில் வைரவர் நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இருவர் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. நீரவ் மோடி 2018 இல் நாட்டை விட்டு வெளியேறி அதே ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டார். இப்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.,
இவர்களைத் தவிர, இந்தியா திரும்பக் கொண்டுவர முயற்சிக்கும் பல குற்றவாளிகளின் பட்டியல் உள்ளது.