தமிழக விவசாயிகளுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு

தமிழக விவசாயிகளுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு

தமிழக விவசாயிகளுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு
Published on

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க வாழ் தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்திய தூதரகம் முன்பாக தப்பு அடித்தும், முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ‌கார்பன் உள்ள‌ட்ட திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். தமிழர்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டு கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது. இந்‌த மனுவை ‌பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com