\
US stock markets have experienced a decline of around 3 percent.
US stock markets have experienced a decline of around 3 percent.Reuters

கடும் வீழ்ச்சியில் அமெரிக்க பங்குச்சந்தை: AI-யால் ஸ்தம்பிக்கும் உலகப் பொருளாதாரம்!

அமெரிக்க பங்குச்சந்தைகள் 3 சதவீதம் அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் இந்த சரிவுக்கு செயற்கை தொழில்நுட்ப துறையே முக்கிய பங்கு வகிக்கிறது.
Published on: 
Summary

அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்திக்க, AI துறையில் ஏற்பட்ட சிக்கல்கள் முக்கிய காரணமாக உள்ளன.

அமெரிக்கா ஈரான் மீது மேற்கொண்ட போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து உலகம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், அமெரிக்காவில் பொருளாதார பாதிப்பு தொடர்ந்து வருகிறது.

அக்டோபர் தொடக்கத்திலிருந்து நவம்பர் பிற்பகுதி வரை நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட் (Wall Street) பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க பங்குசந்தைகளான நாஸ்டாக் (Nasdaq) மற்றும் டவ் ஜோன் (Dow Jone) ஆகியவை 3 சதவீதம் வரை சரிந்துள்ள நிலையில், இதனால் முதலீட்டாளர்களின் பலகோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளது.

அமெரிக்க பங்குசந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவுக்கு செயற்கை தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. Nvidia, AMD, Micron, Broadcom, Oracle போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன. ஆனால் போதிய வருவாய் வராத நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளன.

அதோடு AI துறையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய வணிக சந்தையான சீனாவுக்கு AI சிப் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்க நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. இதுவும் AI தொழில்நுட்ப நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர்களே பல்வேறு நாடுகளில் முதலீடு செய்து அந்த நாட்டுக்கு அந்நிய முதலீடு அதிகளவில் கிடைக்க முக்கிய காரணமாக திகழ்கின்றனர். இந்த சூழலில் அமெரிக்க பங்குசந்தையிலேயே சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப்பெற்று வருவதால் கடந்த இரு நாட்களில் தென் கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் விரைவில் இதன் தாக்கம் பிற நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

US stock markets have experienced a decline of around 3 percent.
6 நாளில் மொத்தமாக மாறிய இயற்கை : வரலாற்றில் முதல்முறை என ஆய்வாளர்கள் அதிர்ச்சி.. பாதிப்புகள் என்ன?