அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை

அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை
அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை

ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண அம்மாகாண நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 16 தேர்வாளர் வாக்குகள் கொண்ட மாகாணத்தில் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனை விட, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் 14 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பின்தங்கியிருந்தார். ட்ரம்ப் தரப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் கைகளால் மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆவதற்கு 270 தேர்வாளர்கள் வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 290 வாக்குகளை ஏற்கெனவே பெற்றுவிட்டதால், ஜார்ஜியா மறுவாக்கு எண்ணிக்கை முடிவு அவரது வெற்றியை பாதிக்காது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com