அதிபர் தேர்தல்|ட்ரம்ப் - பைடன் இன்று நேருக்குநேர் விவாதம்.. எதிர்பார்ப்பில் அமெரிக்க வாக்காளர்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில், முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாதிக்க இருக்கின்றனர்.
ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் - பைடன்புதிய தலைமுறை

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற உள்ளது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாதிக்கின்றனர்.

இதையும் படிக்க:”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!

ட்ரம்ப் - பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ள முடியவில்லை.. கருத்துக்கணிப்பில் தகவல்!

இந்த விவாதத்தின்போது இருவரும் தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்கமளிப்பார்கள். அந்த வகையில், 2024 தேர்தலில் முதல்முறையாக இருவரும் சந்தித்து விவாதம் நடத்தும் நிகச்சியில், எல்லைப் பாதுகாப்பு, குடியேற்றம், பொருளாதாரம், பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் காஸா - இஸ்ரேல் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 90 நிமிடம் நடைபெற இருக்கும் இந்த விவாத நிகழ்வில், ட்ரம்ப்-பைடன் என இரண்டு முன்னணி வேட்பாளர்கள், நாட்டிற்கான தங்களின் செயல் திட்டங்கள் பற்றிய தெளிவான பார்வையை வாக்காளர்களுக்கு வழங்க உள்ளதால், இந்நிகழ்வு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க: மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!

ட்ரம்ப் - பைடன்
ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்! அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com