வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவில் வெகுவிரைவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட விருப்பப்படுவதாகவும், தேவைப்பட்டால் அந்நாடு மீது கூடுதல் அழுத்தம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், லத்தீன் அமெரிக்க தலைவர்களுடன் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் 'வெனிசுலா மக்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அந்நாடு நிலை குலைந்துவிட்டது. வெனிசுலா தொடர்ந்து சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்டால், அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்கும். அங்கு வெகுவிரைவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட விருப்பப்படுகிறோம்’ எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வடகொரியா விவகாரம் குறித்து பேசினார். அவருடனான உரையாடல் மிக திருப்தியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.