உலகம்
அமெரிக்காவை உலுக்கிய ஐடா புயல்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு
அமெரிக்காவை உலுக்கிய ஐடா புயல்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு
ஐடா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லூசியானா மாகாணப் பகுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் பார்வையிட்டார். இதனிடையே புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45ஐ கடந்துள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லூசியானாவை ஐடா புயல் மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி சூறையாடியது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 10 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல் - நியூயார்க் நகரில் அவசரகால நிலை பிரகடனம்