ஜி20 மாநாடு: இந்தியாவுக்கு புறப்பட்டார் அதிபர் ஜோ பைடன் - இன்று மாலையே பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
joe biden
joe bidenpt desk

டெல்லிக்கு இன்று மாலை வரும் ஜோபைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதில், வர்த்தகம், ஜெட் எஞ்ஜின், ட்ரோன் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PM Modi and biden
PM Modi and bidenpt desk

நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜோ பைடனுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பைடன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்க டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஜோ பைடன் இந்தியா வருவதில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதால் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டது.

ஜூன் மாதத்தில் அமெரிக்கா சென்ற மோடி அப்போது நடத்திய பேச்சு வார்த்தைகளின் தொடர்ச்சி டெல்லியில் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி அளவில் டெல்லி வரும் பைடன், 7.30 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் பேச்சு வார்த்தைகளை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com