ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு -  அமெரிக்கா ஒப்புதல்

ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா ஒப்புதல்

ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா ஒப்புதல்
Published on

உக்ரைன் ஆயுதங்களை வாங்குவதற்காக அந்நாட்டிற்கு மேலும் ஆயிரத்து 500 கோடி ரூபாயை அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

உக்ரைன் நாடு ராணுவ ரீதியில் வலிமை அடைய அமெரிக்கா கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து உதவி அளித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் நிதியை கொண்டு போர் விமானங்கள், ஆயுதங்கள், போர் தளவாடங்களை உக்ரைன் வாங்கிக் குவித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு 4வது கட்ட உதவியாக 200 மில்லியன் டாலர் அதாவது ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதைக்கொண்டு உக்ரைன் உடனடியாக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க உள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் இருந்து இது வரை 4 கட்டங்களாக 9 ஆயிரம் கோடி ரூபாய் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் படையினர் சமாளிப்பதற்கு அமெரிக்கா அளித்த நிதியுதவி முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ''என்னால் பேச முடியவில்லை; மனசு கனமாக இருக்கிறது'' - உக்ரைனியர்கள் கண்ணீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com